தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒரேயொரு சட்டமன்ற கூட்டத் தொடரில்தான் பங்கேற்க முடியும்
இந்த இடைத்தேர்தலால் அரசின் பெரும்பான்மை மாறாது. கொரோனா தொற்று காலகட்டத்தில் இடைத்தேர்தல் தேவையற்றது. இதுபற்றி ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழக அரசு அதிகமாக கடன் வாங்குவதற்கு கடன் சுமைதான் காரணம். மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், அரசு செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
எனவே கடன் அதிகமாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் இந்தநிலை மாறும்.
பி.எம். கேர் திட்டம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. தேசிய பேரிடர் திட்டத்தின் கீழ் ரூ.510 கோடியும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.512 கோடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருக்கிறது. தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையைக் கொண்டு கணித்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடத்தி இருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஜ
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.