கோடை காலமானாலும் சரி, குளிர்காலமானலும் சரி சருமப் பிரச்னைகளுக்கு சிறந்தத் தீர்வு கற்றாழை.
கோடை காலத்தில் அதிக தூசு படிவதால் முகத்தில் எரிச்சல், அரிப்பு, பருக்கள், வெப்பத்தால் கட்டிகள் போன்றவை ஏற்படும், அதேபோன்று குளிர்காலத்தில் சருமவறட்சி என்பது பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை. சரும செல்களில் அழுக்கு படிவதே இதற்குக் காரணம்.
சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. இதற்காக செயற்கைப் பொருள்களை நாடாமல் வீட்டிலுள்ள கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்னைகள் நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.
கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு அப்படியே முகத்தில் தடவ பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள், பால், தேன் கலந்த கலவையினை முகத்தில் பேக் போடலாம்.
மேலும் கற்றாழை ஜெல், தயிர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்தும் பயன்படுத்தலாம்.
அதேபோல எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து தடவ முகம் பொலிவு பெறும்.
கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பாதுகாப்பதுடன் பொலிவடையச் செய்கிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது. எனவே கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்திவர சருமம் அழகாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.