1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு அரியலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 19 தனி உதவியாளர், இளநிலை உதவியாளர், நேர காப்பாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 

விளம்பர எண்.3/ACW/2018

மொத்த காலியிடங்கள்: 19

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Personal Assistant - 04
சம்பளம்: மாதம் ரூ.19500-62000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Assistant  - 10
சம்பளம்: மாதம் ரூ.19500-62000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினி அறிவியலில் 6 மாத டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Time Keeper - 02
சம்பளம்: மாதம் ரூ.5670-102-7710
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Driver - 03
சம்பளம்: மாதம் ரூ.5680-102-7720
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tancem.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor, No.735,
Anna Salai, Chennai 600 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2021

மேலும் விவரங்கள் http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags