தனுஷ்கோடியில் பள்ளி மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய
ஆசிரியர்கள் முயற்சியை,சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் சர்ச், கோயிலுடன் பள்ளி கட்டடமும் இடிந்து தரைமட்டமானது.
இதன் பின் மீனவர் குழந்தைகள் கல்விக்காக 18 கி.மீ., துாரமுள்ள ராமேஸ்வரம் வந்த நிலையில், ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் வலியுறுத்தலால் 2002ல் தனுஷ்கோடியில் அரசு நடுநிலைபள்ளி துவக்கப்பட்டு தற்போது 65 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உள்ளனர்.ஊரடங்கினால் 9 மாதம் தனுஷ்கோடியில் பள்ளி கூடம் மூடியதால், மாணவர்கள் பெற்றோருக்கு உதவியாக தனுஷ்கோடி கடலில் கரை வலை, சிறியரக நாட்டுபடகில் மீன்பிடிக்கவும், மீன்களை தரம்பிரித்து வலைகளை உலர்த்தும் பணிக்கு சென்றதால், மாணவர்களின் கல்வி தரம் பாதித்தது.
இதனை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியை ஜேம்ஸ்ஜெயசெல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்திட முடிவு செய்தனர். கடந்த 20 நாளுக்கு மேலாக தனுஷ்கோடி மாணவர்கள், பெற்றோருடன் வேலை செய்த மாணவர்களை தேடி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, முகக்கவசம் அணிந்து பாடம் நடத்தி வருகின்றனர்.
மீனவ குழந்தைகளின் கல்வி தரம் மேம்பட வீடு தேடி பாடம் நடத்தி பிற ஆசிரியருக்கு முன்னுதாரமாக திகழும் தனுஷ்கோடி அரசு பள்ளி ஆசிரியருக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.