1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

NMMS தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்


nmms-board-exam

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

அதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


1. கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும்.

அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதியUSER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:

2. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

4. பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.

5. வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.

6. பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.

7. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.

8. 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.

பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021
Summary Report தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021

மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01.2021

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags