பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி கொண்டு வந்திருக்கும் புதிய தனியுரிமை கொள்கைகள் சர்ச்சையாகியுள்ள நிலையில், இது தொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பார்லிமென்ட் குழு தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த வாரம் புதிய பிரைவசி கொள்கைகளை அறிவித்தது. அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதை கட்டாயமாக்கியது. புதிய பிரைவசி கொள்கையின் படி வாட்ஸ்ஆப் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு வணிக நோக்கத்திற்காக பகிரப்படும். இதனால் வாட்ஸ்ஆப் அனைத்து உரையாடல்களையும் ஒட்டுக்கேட்குமோ என்ற அச்சம் எழுந்தது. உலகளவில் பல பயனர்கள் இதனை எதிர்த்தனர். இதனால் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறினர்.
அதன் பிறகு வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதாக வாட்ஸ்ஆப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் மூலம் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை 100% தொடர்ந்து பாதுகாப்போம் என்று கூறியுள்ளது. “வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் உங்கள் தனிப்பட மெசேஜ்கள் அல்லது அழைப்புகளை பார்க்க முடியாது. அந்த தகவல்களை நாங்கள் சேமிப்பதில்லை. உங்கள் தொடர்புகளை பேஸ்புக்கிற்கு பகிர மாட்டோம். வாட்ஸ்ஆப் குழுக்களும் தனிப்பட்டதாகவே தொடரும். பகிரப்படும் இருப்பிடங்களையும் வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் பார்க்க முடியாது.” என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் காங்., எம்.பி., சசி தரூர் தலைமையிலான பார்லி., தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வரும் வாரங்களில் பேஸ்புக் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைவசி பிரச்னை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா "என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் என்றால் அதனை எப்படி வாட்ஸ்ஆப் வேறொருவருக்கு பகிர முடியும்" என்று கேட்டுள்ளார். அதே போல் டுவிட்டருக்கும் சம்மன் அனுப்ப உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்ற தாக்குதலின் போது டிரம்பின் கணக்கை தன்னிச்சையாக முடக்கியது டுவிட்டர். அவர்கள் வெளியீட்டாளர்களா அல்லது நடுவர்களா என்று கேட்க விரும்புவதாக பா.ஜ.., எம்.பி., நிஷிகந்த் துபே மற்றும் காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் முடிவு செய்துள்ளனர். நடுவர்கள் என்றால் ஒருவரின் கணக்கை எப்படி தன்னிச்சையாக முடக்க முடியும். நேற்று டிரம்புக்கு நடந்தது நாளை வேறு யாருக்கும் நடக்கும் என விவாதிக்கின்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.