ஐ.ஆர்.சி.டி.சி., யின் புது இணையதளம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின், நவீன மயமாக்கப்பட்ட, டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், நேற்று துவக்கி வைத்தார்.
ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய விரும்புவோர், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர். இந்த இணையதளம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய இணையதளத்தை, டில்லியில் நேற்று துவக்கி வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பியுஷ் கோயல் பேசியதாவது:
மக்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்ய, ரயில்வே கடமைப்பட்டுள்ளது. ரயில் பயணியருக்கான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கப்பட்ட இணையதளம் வழியாக, மின்னணு முறையில், டிக்கெட்களை எளிதாக முன்பதிவு செய்யலாம். சர்வதேச தரத்தில், சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளமாக, இது இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.