சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, தலைப்பாரம்,தொண்டைவலி எதுவாக இருந்தாலும் விரைவில் குணமாக இந்த திப்பிலி சித்தரத்தைச் சூரணத்தைப் பயன்படுத்தி பயனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
திப்பிலி - 100 கிராம்
சித்தரத்தை - 100 கிராம்
அதிமதுரம் - 100 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
செய்முறை
முதலில் தேவையான அளவு திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம் மற்றும் பனங்கற்கண்டு இவை நான்கையும் எடுத்துக் கொண்டு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
திப்பிலி, சித்தரத்தை, பனங்கற்கண்டு மற்றும் அதிமதுரம் நான்கையும் தனித்தனியாக அரைத்து பொடிசெய்து கொள்ளவும். பொடிசெய்த பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் சைனஸ், தும்மல் மற்றும் தலைப்பாரம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படும்பொழுது இந்தச் சூரணத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடவும். தேவைப்பட்டால் மூன்றுவேளையும் எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.