Home »
General
» 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா ? : பள்ளிக்கல்வித் துறை விளக்கம்
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா ? : பள்ளிக்கல்வித் துறை விளக்கம்
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா ? : பள்ளிக்கல்வித் துறை விளக்கம்
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா ? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர் :
நிகழ் கல்வியாண்டில் மாணவர்கள் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும் பெற்றோர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும் கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 9 , 10 மற்றும் பதினோராம் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கடந்த 25ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் பிரித்துக் கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றும் இதனால் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த இருப்பதாக தகவல் பரவியது இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது.
பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளில் எந்தவிதமான நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் நிகழாண்டு பள்ளிக்கல்வித்துறையை பிளஸ்-1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் என சில தவறான தகவலை பரப்பி வருகின்றனர் . இது முற்றிலும் தவறான தகவல் ஆகும் இது போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் மாணவர்களுக்கும் தாங்கள் சேர விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும் எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இப்போது மட்டுமல்ல எப்போதும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
தற்போது பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இடையில் 2 தேர்வுகளை நடத்தி அந்த தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் அதேபோல மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அசைன்மென்ட் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது மாணவர்கள் சிரமம் ஏற்படாத வகையில் மதிப்பெண்களை வழங்க தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.