தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது.
முதல் நாளில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டைக் காட்டிலும் மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு 20 லட்சம் அதிகரித்துள்ளது. அதேபோல, உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பை விட ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறைவாக உள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின் மீது 45 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.