இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கை:
தமிழகத்தில் குழந்தையின் பெயரை பிறந்தநாள் முதல் 12 மாதம் வரை இலவசமாக பதிவுசெய்து கொள்ளலாம். 2000-ம்ஆண்டுக்கு முன் பெயரின்றி பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள் அனைத்துக்கும் 2024-ம் ஆண்டு வரைபெயருடன் பதிவு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவுசெய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம்.
ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. இதுதொடர்பாக விழிப்புணர்வை அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழையும் கட்டாயம் பெற வேண்டும். இந்த விவகாரம் சார்ந்த அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.