தி.மு.க., - டி.ஆர்.பி.ராஜா:
மன்னார்குடி ஒன்றியம், மூவாநல்லுார் உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
மூவாநல்லுார் பள்ளி இடம், பள்ளி கல்வித் துறைக்கு மாற்றப்படாமல் உள்ளது. மாற்றப் பட்டதும் சுற்றுச்சுவர் கட்டப்படும்.டி.ஆர்.பி.ராஜா: அதே பள்ளியில், கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. அதையும் செய்து தர வேண்டும். மேலும், பல்வேறு பள்ளிகளில், சுற்றுச்சுவர், வகுப்பறை இல்லாத சூழல் உள்ளது. அவற்றையும் செய்து தர வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
இப்பள்ளியில், 128 மாணவர்கள் படிக்கின்றனர். மூன்று வகுப்பறைகள், ஓர் ஆய்வகம், கழிப்பறை வசதி உள்ளது. பத்து ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். பள்ளி இடம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதும், ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ், சுற்றுச்சுவர் கட்டப்படும்.ராஜா: மன்னார்குடியில் நுாலகம் இல்லை. எனவே, 'டிஜிட்டல்' நுாலகம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
நிதி நிலைமைக்கேற்ப பரிசீலிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர், கட் டடம் கட்ட, கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் தொகுதி, உதயநிதி தொகுதி யிலும், கட்டடம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்; படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அ.தி.மு.க., - காமராஜ்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் - விஜயதாரணி:
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில், உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பணம் செலுத்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தி, அனைத்து வசதிகளையும், செய்து தர வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
தரம் உயர்த்த, சில நிபந்தனைகள் உள்ளன. அவை பூர்த்தியானால், நடவடிக்கை எடுக்கப் படும்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி:
ஆரம்ப பள்ளிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்படுகிறது.ஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பணி மேற்கொள்ள, ஊராட்சி துறை அனுமதி அளிப்பதில்லை. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
அமைச்சர் மகேஷ்:
துறை அமைச்சர்களுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.