ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, முடித்து வைத்தது.
இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வருவதால், உரிய விதிமுறைகளை வகுக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இம்மனுக்களை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரித்தது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை, நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்கை இன்று முடித்து வைத்த நீதிபதிகள்,
*மத்திய மாநில அரசுகள் உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
* ஆன்லைன் வகுப்புக்கு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும்
* பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் இருக்க வேண்டும்
* மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்
* விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.