இளம் வயதினர் ஸ்மார்ட்போன் உபயோகிக்க முடியாத நேரத்தில் ஏற்படும் பயம் அல்லது பதற்றமே நோமோபோபியா' எனப்படுகிறது. இது கல்லூரி பருவத்தினரிடையே அதிகம் இருப்பதாகவும், இது ஒருவரது தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது என்றும் அமெரிக்கப் பலக்லைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனுடன் தொடர்பில்லாத சமயத்தில் ஏற்படும் பதற்றம் அல்லது பயம் மிகவும் பொதுவானது. ஆனால், சமீபமாக கல்லூரி மாணவர்களிடையே சுமார் 89 சதவிகிதம் மிதமான அல்லது கடுமையான நோமோபோபியா இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை, குறைவான நேரம் தூக்கம், விழித்திருக்கும் நேரத்தில் மாற்றம் மற்றும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என ஆர்கன்சாஸின் கான்வேயில் உள்ள ஹென்ட்ரிக்ஸ் கல்லூரி பேராசிரியர் ஜெனிபர் பெஸ்கா தெரிவித்தார். நோமோபோபியா தீவிரம் தொடர்ந்து அதிகரித்தால் அதன் தாக்கங்களும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆய்வில், சராசரியாக 20 வயதுடைய 327 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம், தூங்கும் நேரம், ஸ்மார்ட்போன் இல்லையெனில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன் முடிவில், தூங்குவதற்கு முன்னும் பின்னும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைத்தால் மட்டுமே இந்த குறைபாட்டை போக்க முடியும் என்றும் குறிப்பாக படுத்தவுடன் ஸ்மார்ட்போனை எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
லிட்டில் ராக் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டேவிட் மாஸ்டின், ப்ரூஸ் மூர் மற்றும் இளங்கலை மாணவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு இந்த ஆய்வினை மேற்கொண்டு முடிவுகளை 'ஸ்லீப்' என்ற ஆன்லைன் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.