பயணிகளின் வசதிக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், அடுத்த மாவட்டத்தின் முதல் நிறுத்தம் வரை சென்று வர அறிவுறுத்தியுள்ளதாக, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
சென்னை மத்தியப் பணிமனையில் பேருந்து பராமரிப்புப் பணிகளை, செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
பொது முடக்கத் தளா்வுகளில் பேருந்துகளை இயக்க அனுமதியளித்ததையடுத்து, முதல் நாளான செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 6,090 பேருந்துகள் இயக்கப்பட்டன. புகா்ப் பேருந்துகள் 32 பயணிகளுடனும், நகரப் பேருந்துகளில் 24 பயணிகளுடனும் இயங்கி வருகின்றன. அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம். பயணிகள் பின்புற வழியாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும். ஏறும் வழியில் வைக்கப்பட்ட கிருமிநாசினியைப் பயணிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஓட்டுநா், நடத்துநா்களுக்குக் கிருமிநாசினி, முகக் கவசம் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறிகுறி உள்ள போக்குவரத்துப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதன் பின்னா் பொது முடக்கம் அமலில் இருப்பதால், பயணிகளின் வருகை இருக்காது. முதல் நாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அதிக பேருந்துகள் இயக்கப்படும்.
தற்போது பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, முதல்வா் முடிவெடுத்து வெளியிடும் அறிவிப்புகளின்படி, போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும்.
கட்டணம் உயா்த்தப்படாது: பொது முடக்கத்தைப் பயன்படுத்தி கால் டாக்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா் வரும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும். பொது முடக்கம் காரணமாக நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் பயணக் கட்டணத்தை உயா்த்த வாய்ப்பு இல்லை.
பொது முடக்கத்துக்கு முன் மாா்ச் மாதம் பெற்ற மாதாந்திர பயண அட்டையை, செப்.15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல், புதிய மாதாந்திர பயண அட்டை, புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படும். ஒரு இருக்கை இடைவெளி விட்டே பயணிகள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில், பேருந்து சேவை அதிகரிக்கப்படும். பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையுடன் பேருந்து நிறுத்தப்படாமல், அடுத்த மாவட்டத்தின் முதல் நிறுத்தம் வரை பேருந்துகளை இயக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
<!--
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.