உடல் எடையை குறைப்பதற்கு பூண்டு இயற்கையான மருந்தாக பயன்படுகிறது.
அனைத்து வீட்டு சமையலறையிலும் பொதுவாக காணப்படும் பொருட்களில் ஒன்று பூண்டு. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் இதன் பங்கு முக்கியமானது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. குறைந்த ரத்த அழுத்தம், ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வீட்டு மருந்தாக பூண்டு இருக்கும். இதுமட்டுமல்லாமல் உடல் எடை குறைவதற்கு இது சிறந்த பலனைக் கொடுக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிதில் குறைக்கும். இதில் வைட்டமின் பி6, சி மற்றும் நார்ச்சத்தும் கால்சியம் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நீங்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க இதனை உட்கொள்ளும் முறை தொடர்பான 3 வழிகளை தற்போது பார்ப்போம்.
மிளகுடன் பூண்டு:
ஒரு கிளாஸ் தண்ணீரில் பூண்டு சேர்த்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அந்த பூண்டை எடுத்து விட்டு, அந்த நீரில் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வர, உடல் எடை குறையும்.
தேனுடன் பூண்டு:
பூண்டை தோலுரித்து நன்றாக நசுக்கவும். அதன்பிறகு இதனை தேனுடன் கலக்கவும். இந்த கலவையை 20 நிமிடங்கள் அப்படியே வைத்து, அதன்பிறகு உட்கொள்ளவும். இதனை தினமும் ஒருமுறை சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறுடன் பூண்டு:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் பூண்டு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். அதன்பிறகு இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
ஒரே நாளில் அதிக அளவு பூண்டு உட்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இதனால் வாய் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் குறைவான அளவிலான பூண்டு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு இந்த வழிகள் ஒத்துவருமா என மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.