தலைமுடி பராமரிப்பு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் சமையலறையில் உள்ள மளிகைப் பொருட்களில் இயற்கையாகவே ஏராளமான சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இவை உணவுக்கு சுவை அளிப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகின்றன. குறிப்பாக நாம் கறிவேப்பிலையை அனைத்து உணவிலும் சேர்ப்போம். ஆனால் சாப்பிடும் போது அதனை எடுத்து போட்டு விடுவோம். ஆனால் கறிவேப்பிலையின் பயன்கள் ஏராளம். நீங்கள் அதனை மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை பருகலாம். பொதுவாக தலைமுடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை நல்ல பலனை கொடுக்கும் என்பது பலருக்கும் தெரியும். இதுமட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளும் உண்டு.
குமட்டல்:
ஆறு கறிவேப்பிலையை எடுத்து கழுவி உலர வைக்கவும். இதனை அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும். இதனை குளிர வைத்து சாப்பிட்டால் குமட்டல் தொந்தரவு சரியாகும்.
வாய் துர்நாற்றம்:
கறிவேப்பிலையை ஐந்து நிமிடங்கள் மென்று, அதன்பிறகு தண்ணீர் குடிக்கவும். இதனால் வாய் துர்நாற்றம் சரியாகும்.
வயிற்றுப்போக்கு:
சுமார் 30 கறிவேப்பிலையை கழுவி அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரிக்கவும். இதனை மோருடன் கலந்து குடிக்கவும். இதனால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை சட்னி செய்து சாப்பிடலாம். இதனை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
வாய்ப்புண்:
கறிவேப்பிலை தூளை தேனுடன் கலந்து கொள்ளவும். இதனை வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளவும். இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர வாய்ப்புண் சரியாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.