வாழைப்பழம் Hair mask தலைமுடி வலுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு பயன்படுகிறது.
முடி உதிர்வு, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண செயற்கை தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் தலைமுடிக்கு ஏற்ற வகையில் அதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாமல் இயற்கை முறையிலேயே உங்கள் தலைமுடியை பராமரிக்கலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. சில முடிகள் வலுவாக இல்லாததால், உடைந்து துண்டு துண்டாக இருக்கும். இதனால் முடி மேலும் வளராமல் இருக்கும். சிலரது தலைமுடி, வேர்க்கால்கள் அருகே வலுவாகவும், கீழே அலை அலையாக வலுவிழந்தும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த் ஹேர் மாஸ்க் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம் வைத்து ஹேர் மாஸ்க் எப்படி தயார் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். இதன்மூலம் வலுவிழந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். அவை மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இது அனைத்து வகையான முடிகளுக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம்- 1
தேன் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால்
செய்முறை:
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
இந்த கலவையை தலைமுடியில் தடவி, ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். shower cap போட்டுக் கொண்டால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
அதன்பிறகு வெறும் தண்ணீரில் தலைமுடியை கழுவிக் கொள்ளவும். வாரத்திற்கு ஒருமுறை இதனை செய்யலாம்.
பயன்கள்:
வாழைப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன. தலைமுடி வலுவாகவும், மென்மையாகவும் இருப்பதற்கு இது உதவுகிறது.
தேன் இயற்கையான கிருமிநாசினி போல் செயல்படுகிறது. முடிவேர்க்கால்களை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
தேங்காய் பால் தலைமுடியை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சிறந்த ஹேர் கண்டிஷனராக இது செயல்படும். இதில் தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.