புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் கல்வித் துறை சார்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமீபத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. இதில், 'பள்ளி மாணவர்களுக்கு, தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன், மூன்றாவதாக ஏதேனும், ஒரு மொழியை கற்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக அரசு ஏற்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின், மற்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, குழு அமைக்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, உயர் கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களாக, சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் பிச்சுமணி; அழகப்பா பல்கலை துணை வேந்தர் ராஜேந்திரன்; மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன்; திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் தாமரைசெல்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு, தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இதேபோல், பள்ளி கல்வித் துறை சார்பில், தனி குழு அமைக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.