தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கு குறைந்த அளவில் ஆசிரியர்கள் போதும் என்பதால், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக் கூறு இல்லை. தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்பளம் வழங்காதது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தால் அரசு பரிசீலிக்கும். தமிழக அரசு பள்ளிகளில் 1,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.
வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணி வழங்கப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.