புதிய கல்வி கொள்கையில் பள்ளி கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இது குறித்து ஆராய13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் உறுப்பினர் செயலாளராக பள்ளிகல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வி குறித்து ஆராயும் குழுவிற்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமை வகிப்பார் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பூஜா குல்கர்னி லதா, கவிதா ராமு, முனியநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மற்றும் கல்வி துறையை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.மேலும் மத்திய அரசின்கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்ற சூழ்நிலை குறித்து ஆராய்ந்து ஒரு ஆண்டிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும் எனவும் ,புதிய கல்விகொள்கையுடன் இரு மொழி கொள்கை பொருந்துகிறதா என்பதையும் குழு ஆராயும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் உயர்கல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.