இணையவழி வகுப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து விதமான பள்ளிகளிலும் இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மன உளைச்சலால் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பதால் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் குறித்த அட்டவணையை சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், இணையவழியில் ஒவ்வொரு வகுப்புக்கான அட்டவணை, ஆசிரியர்கள் எடுத்த வகுப்பு விவரங்களை பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இணையவழி வகுப்பு விவரங்களை முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதலை பள்ளிகள் பின்பற்றுவதை முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும். இணையவழி வகுப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புகார்கள் இருந்தால் grievencesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.