சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயாரிக்கும் செய்முறையை இங்கே காண்போம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை உங்களுக்கு பிடித்த வகையில் விதவிதமாக தயாரித்து சாப்பிடலாம். குறிப்பாக பீட்ரூட், உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு பீட்ரூட் பிடிக்காது. அதனை அவர்களுக்கு பிடித்த சப்பாத்தியுடன் சேர்த்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இது சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதனை தயார் செய்யும் முறையை தற்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
4 பீட்ரூட்
2 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் Amchur தூள் (உலர் மாங்காய் தூள்)
அரை டீஸ்பூன் கரம் மசாலா
1 டீஸ்பூன் எண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி துருவிய பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இது ஓரளவு வதங்கியதும் பச்சை மிளகாய், அம்ச்சூர் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனை நன்றாக கலந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.
சப்பாத்தி செய்வதற்கு பிசைந்து வைத்த கோதுமை மாவில் தற்போது தயாரித்த இந்தக் கலவையை சேர்க்கவும். அதன்பிறகு எப்போதும் போல் சப்பாத்தி தயாரித்து சாப்பிட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.