கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்தவர்கள், புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மொத்த காலியிடங்கள்: 3,162
பணி: Gramin Dak Sevaks
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநிலை மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை.
வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 14,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Tamilnadu-19_Cycle3%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.