
கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்தவர்கள், புதிய வாய்ப்புகளைத் தேடி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு அல்லது தரவு புள்ளிவிவர உளவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம்: வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பொருளாதார அளவீடுகள் நிதி களத்துடன் கூடிய நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Specialist in Forensic Audit- 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது எம்பிஏ (நிதி) முடித்திருக்க வேண்டும். மேலும் தடயவியல் கணக்கியல் மற்றும் மோசடி கண்டறிதலில் பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: தடயவியல் தணிக்கை மற்றும் மத்திய,மாநில அளவிலான துறைகளில் தடயவியல் தணிக்கைக் குழுவின் ஒரு பிரிவில் சிறப்பு பணி அனுபவத்துடன் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Specialist - 01
தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டய கணக்கியல் அல்லது நிறுவனத்தின் செயலாளர் அல்லது சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 30 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கருவூலங்களில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2020 மாலை 6 மணி வரை
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற முழுமையான விவரங்களை https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3846 அல்லது https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADV26032020FLD7EABB7E213B4D5C9CB0328FF0EB04B0.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.