'நீட்' தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.
'நீட்' மற்றும் ஜே.இ.இ. பிரதான நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால் ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 'போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள், ஆளும் ஆறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல் கொரோனா பரவலுக்கு இடையே தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை கஷ்டங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் , இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், 13ம் தேதி தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.