கடல்நீர் ஏன் உப்பாக உள்ளது ?
450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனை சுற்றி கொண்டிருந்த அணுக்கள் ஒற்றினைந்து பூமி உருவாகியது. அந்த சமயத்தில் பூமியில் உயிர்கள் வாழும் தன்மையும் இல்லை. அப்பொழுது ஒரு எரிகல் பூமியை தாங்கியது
அதில் பிரிந்த ஒரு பகுதி தான் சந்த்திரன், நம்மை சுற்றி வரும் சந்திரன் பூமியின் பசிபிக் பெருங்கடல் ஆழ பகுதியில் சரியாக பொருந்தும். சரி கேள்விக்கு வர்றேன்
அந்த சமயத்தில் உருவான புழுதி மண்டலம் பூமியை முழுவதுமாக மூடியது. சூரிய ஒளியே தெரியாத அளவு. ஆக பூமி வெப்பத்தை நீக்கி குளிர ஆரம்பித்தது. புழுதியில் இருந்த ஆக்ஸிசனும், ஹைட்ரஜனும் சேர்ந்து மேகம் ஆனது
அதன் மேல் குளிர் பட்டவுடன் அது நீராகி மழையாக பெய்ய ஆரம்பித்தது. நாள் கணக்கல்ல, மாத கணக்கல்ல, ஆண்டு கணக்கில் பொழிந்தது, பூமியில் பெய்த மழை பள்ளத்தை நோக்கி ஓடி சேர்த்த இடமே கடல் பகுதியாக மாறியது.
நாம் உப்பாக பயன்படுத்தும் சோடியம் குளோரைடு மட்டுமல்ல, பூமி பல தாது உப்புகளால் ஆனாது, எதெல்லாம் நீரில் கரையுமே அதெல்லாம் அந்த தண்ணீரோடு பள்ளத்தை நோக்கி ஓடியது.
அப்படியாக நல்ல தண்ணிரீல் தேங்கிய நீர் கொஞ்சம் கொஞ்சமாக உப்பு தன்மை பெற்று கடலானது. எல்லா நீரிலும் தாது உப்புகள் உள்ளது, அது குறைந்த அளவு உள்ளதால் அதை நம்மால் உணர முடியவில்லை. உண்மையில் அது தான் மினரல் வாட்டர்.
அப்படியாக சேர்ந்த உப்பை கொண்டே பூமியின் வயதை கணிக்கிட்டுள்ளோம். ஏனென்றால் நாளுக்கு நாள் ஆண்டுக்கு ஆண்டு கடலில் உப்பு அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. அதை விகிதத்தை வைத்து விஞ்ஞானிகள் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் எங்கிறார்கள்
உப்பு தான், வட, தென் துருவத்தில் கூடிய அதன் அழுத்தம் தான் பூமியை ஆரஞ்சு பழம் போல் ஆக்கியது, அதனால் தான் பூகம்பமும், சுனாமியும் ஏற்படுகிறது .
கடல் உப்பாக இருக்க காரணம் ஆறுகளின் வழி பூமியின் தரையில் இருக்கும் உப்புகளை கரைத்து எடுத்து செல்வதே !
கடல் உப்புகள்
விஞ்ஞானிகள் நூறு வருடங்களுக்கும் மேலாக கடல் நீரை ஆராய்ச்சி செய்திருக்கிற போதிலும், அதில் என்னென்ன இரசாயனப் பொருள்கள் உள்ளன என்பதைப் பற்றி அவர்களுக்கு முழுமையாக தெரியாது. இருந்தாலும், கடல் நீரில் கரைந்திருக்கும் பல்வேறு உப்புகளை பிரித்தெடுத்து, அவற்றின் விகிதங்களை கணக்கிட்டிருக்கிறார்கள். அவற்றில் சில
55% குளோரைடு
30.6 சோடியம்
7.7 சல்பேட்
3.7 மெக்னீசியம்
1.2 கால்சியம்
1.1 பொட்டாசியம்
0.4 பைகார்பனேட்
0.2 புரோமைடு
போரேட், ஸ்ட்ரான்ஷியம், ஃபுளோரைடு போன்றவைகளும் மற்றவைகள் இன்னும் தெரியவில்லை...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.