👰 கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடும் போது நமக்கு அதிகளவில் சத்துக்கள் கிடைக்கிறது.
👰 கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
👰 கேரட்டில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
👰 தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம்.
👰 கேரட் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கிறது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
👰 கேரட் சாறுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
👰 பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
👰 பெண்கள் அடிக்கடி கேரட் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் காத்துக் கொள்ளலாம்.
👰 கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம்.
👰 கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடுகிறது.
👰 கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து தோல் சுருக்கத்தை நீக்குகிறது.
👰 உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைத்து முகம் பொலிவு பெறும்.
👰 மேலும், ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
👰 கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, கொத்தமல்லித்தழை, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும். மேலும் எலும்புகள், பற்கள், தோல், கண் ஆகியவற்றுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.