கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சுருங்கியுள்ளது.
இந்தியாவில் 50 நாட்களுக்கு மேலாக தொடரும் ஊரடங்கால் பல்வேறு தொழில், வியாபார நிறுவனங்களில் வருவாய் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்த சம்பள குறைப்பு என்பது வெறுமனே இல்லாமல், சம்பளத்தின் பல்வேறு கூறுகளான அடிப்படை ஊதியம், வீட்டு வாடகைப் படி, இதர படிகள் உள்ளிட்டவற்றிலும் பிரதிபலிக்க வேண்டும். இல்லையென்றால் பழைய சி.டி.சியின் படியே வருமான வரி பிடித்தம் செய்யப்படக் கூடும் என்கின்றனர். இருப்பினும் சிலர் படிவம் 16 தான் சம்பளத்தில் வரி பிடித்தம் பற்றி இறுதியானது என கூறுகின்றனர்.
வருமான வரி சட்டங்களின் படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் அல்லது பெறப்பட்ட சம்பளம் இவற்றில் எது முந்தையதோ அதன் படி வரி விதிப்பார்கள். மறுபுறம், பணம் செலுத்தும் நேரத்தில் டி.டி.எஸ் கழிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக சம்பளம் குறைக்கப்படும் போது அவை சி.டி.சி.,யிலும் குறைக்கப்படுகிறதா என்பதை தங்கள் நிறுவனங்களிடம் பேசி உறுதி செய்துகொள்வது நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.