அறிவியல்-விளக்கம்🔥
💐பசி (Hungry) ஏற்படுவதேன்? 💐
🏵பதில்🏵👉வயிறு காலியாக உள்ளபோது பசியை (hunger) ஏற்படுத்தும் கெரலின் (ghrelin) ஹார்மோனானது (hormones) மூளையின் ஹைப்போதாலமஸ் (hypothalamus in brain) பகுதிக்கு மின்சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஹைப்போதாலமஸ்ஸில் உள்ள நியுரான்களின் தொகுப்புகள் (sets of neurons) பசியை ஏற்படுத்தும் NPY மற்றும் AGRP புரதங்களை (proteins) உருவாக்குகிறது. இதுவே நமக்கு பசியை ஏற்படுத்துகிறது.
👉கெரலின் பசியார்வத்தை (appetite) அதிகரிக்கும் ஹார்மோனாகும்.
👉கெரலின் ஹார்மோன் உடல் எடையில் (body weight) பங்கு வகிக்கிறது.
🏵விளக்கம்🏵
👉நம் உடலை இயங்க வைக்கவும்,இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு உந்தி தள்ளவும் மற்றும் உடலில் செல்கள் இறக்கும் போது அவற்றை மாற்றவும் குளுக்கோஸ்,கார்போஹைட்ரேட்,புரதங்கள் கொழுப்புகள் போன்றவை மூலக்கூறு வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
👉உணவிற்குப் பிறகு,உணவானது வயிறு, சிறுகுடல் மற்றும் பெருகுடல் வழியாக தள்ளப்பட்டு இரப்பை குழாய்கள் மெதுவாகக் (~130 நிமிடங்கள்) காலியாகின்றன.
👉பொதுவாக பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கெரலின் மற்றும் லெப்டின் (leptin) ஆகும்.
👉லெப்டின் ஹார்மோனானது கொழுப்பு திசுக்களில் உள்ள கொழுப்பு செல்களிலிருந்து (fat cells) வெளியாகும் ஹார்மோன் ஆகும்.இது பசியார்வத்தை (appetite) குறைக்கிறது.
👉வயிறு நிரம்ப சாப்பிட்டவுடன் லெப்டின் ஹார்மோன் ஹைப்போதாலமஸ் பகுதியை தூண்டுகிறது.ஹைப்போதாலமஸ்ஸில் உள்ள நியூரான் தொகுப்புகள் CART மற்றும் ஆல்பா-MSH (Alpha-MSH) ஆகிய புரதங்களை உருவாக்குகிறது.இது வயிறு நிரம்பியுள்ளதை (fullness) உணரச் செய்கிறது.
👉லெப்டின் ஹார்மோனானது உடலின் ஆற்றல் செலவினங்களை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்துகிறது.
🔥மேலும் அறிக🔥
👉உலக மக்கள் தொகையில் 11.3% மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் பசியுடன் இருக்கின்றனர்.சுமார் 805 மில்லியன் மக்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட உணவான 2100 கலோரிகளைவிட குறைவான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்கின்றனர்.
👉ஆசியாவில் மட்டும் 526 மில்லியன் மக்கள் உண்ண போதுமான உணவில்லாமல் பசியுடன் வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.