1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கனவு (dreaming) காண்பதேன்-அறிவியல்-விளக்கம்-

🔥அறிவியல்-விளக்கம்🔥
💐கனவு (dreaming) காண்பதேன்💐





🏵பதில்🏵
👉கனவு ஏற்படுவதற்கான உறுதியான ஆதாரம் ஏதுவுமில்லை என்றாலும் கனவுகள் பொதுவாக நமது சமீபத்திய செயல்பாடுகள்,உரையாடல்கள் அல்லது நம் வாழ்க்கையில் பிற சிக்கல்களை அடிப்படையாகக் கொண்ட எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
🏵விளக்கம்🏵
👉கனவு என்பது தூக்கத்தின் REM நிலையில் ஏற்படும் இல்பொருள்காட்சியாகும் (Hallucination).
👉நனவு நிலையில் நம் எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட தர்க்கத்திற்கு (logic) உட்படுகின்றன.
👉கனவில் நமது எண்ணங்கள் குறைந்த தர்க்கத்திற்கு உட்படுகிறது அல்லது இல்லாமல் போகிறது.
👉கனவுகளானது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான நாடகங்களை எதிர்கொள்ளும் வழிகளாகும்.
👉கனவின் போது ஏற்படும் அச்சுறுத்தலான நிகழ்வை சமாளிக்க மூளையின் amygdala பகுதி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
👉REM தூக்கத்தின் போது மூளை அமைப்பு நரம்பு சமிக்ஞைகளை அனுப்புவதால் நமது தசைகள் தளர்த்தப்படுகிறது.இதனால் அதிர்ஸ்டவசமாக கனவின் சாகசம் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போகிறது.
👉கொடுங்கனவானது  (nightmares) மன அழுத்தம்,பதட்டம் அல்லது சில மருந்துகளின் எதிர்வினையால் ஏற்படுகிறது.
👉சரியான தூக்கம் ஒரிரண்டு நாள்கள் இல்லாதவர்கள் தெளிவான (vivid dreaming) கனவைக்காணலாம்.
👉கர்ப்பமாக உள்ளவர்களுக்கு அதிகரித்த ஹார்மோன் செயல்பாட்டால் தெளிவான,தீவிர கனவை காணலாம்
🔥மேலும் அறிக🔥
👉நல்ல இரவு தூக்கம் தீவிரமான கனவை குறைக்கிறது.
👉கனவு கண்டாலும் கனவின் போது எழுந்திருக்கவில்லை என்றால் அதை நினைவில் கொள்ள முடியாது.
👉நம் நினைவில் உள்ள கனவுகள் நாம் விழித்தபோது நடந்த கனவின் நிகழ்வாகும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags