1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மண் (soil) பல்வேறு நிறத்தில் (different colors) காணப்படுவதேன்

அறிவியல்-விளக்கம்🔥

💐மண் (soil) பல்வேறு நிறத்தில் (different colors) காணப்படுவதேன்💐
🏵பதில்🏵




👉மண்ணானது அதில் இடம் பெற்றுள்ள வேதியியல் கலவையின் (chemical composition) காரணமாக நிறத்தை மிகவும் தனித்துவமான அம்சமாக (very distinguishing feature) கொண்டுள்ளது.
🏵விளக்கம்🏵
👉மண் என்பது ஒரு மதிப்பிடமுடியாத மற்றும் புதுப்பிக்க இயலாத (nonrenewable resource) வளமாகும்.
👉இது அனைத்து வகையான தாவர வாழ்விற்கும் உடல்சார்ந்த அடித்தளத்தையும்,வேதியியல் கலவைகளையும் வழங்குகிறது.
👉அனைத்து மண்ணும் பாறைகள், தாதுக்கள் மற்றும் தாவரப் பொருள்களால் உருவாகின்றன.
👉ஒரு மண்ணின் நிறம் மற்றும் அதன் கலவைப் பொருள்கள் அதன் வயதைத் குறிக்கின்றன.
👉மண் ஒரு பரந்த அளவிலான நிறத்தை வெளிப்படுத்துகிறது.அவை சாம்பல் (Gray) ,கருப்பு,வெள்ளை,சிவப்பு,பழுப்பு (brown) ,மஞ்சள் மற்றும் பச்சை
1)மஞ்சள் அல்லது சிவப்பு நிற மண் :ஆக்ஸிஜனேற்றப்பட்ட பெர்ரிக் ஆக்ஸைடு (oxidized ferric  iron oxides) இருப்பதைக் குறிக்கிறது.
2)அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற மண்:அதிக கரிமப் பொருள்கள் (organic matter content) இருப்பதைக் குறிக்கிறது.மண்ணில் உள்ள மாங்கனீசு கருப்பு நிறத்தை தருகிறது.
3)சிவப்பு மற்றும் பழுப்பு நிற மண் : நன்கு உலர்ந்த மண் ஆக்ஸிஜனேற்றத்தினால் சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாகத் தோன்றுகிறது.
4)சாம்பல் அல்லது பச்சை நிற மண் : ஈரமான மண் குறைந்த அளவு இரும்பு ஆக்ஸைடை கொண்டிருப்பதனால் சாம்பல் அல்லது பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
Glauconite ஆனது பச்சைநிறமாக மாற்றுகிறது.
5)வெண்மை நிற மண்:வறண்ட பகுதிகளில் மண்ணில் உள்ள கால்சைட் (calcite) மண்ணை வெண்மையாக உருவாக்குகிறது.
👉மண்ணின் நிறம் பொதுவாக மண்ணின் வயதைக் குறிக்கிறது.வெளிர்நிற மண் குறைந்த வயதையும் (younger soils) அடர்நிற மண் அதிக வயதையும் கொண்டுள்ளன.
🔥மேலும் அறிக🔥
👉மண் வகைகள் கீழ்க்கண்ட நிறங்களில் காணப்படுகின்றன.
👉தோட்டமண்-பழுப்பு to கருப்பு
👉களிமண்-மஞ்சள் to சிவப்பு
👉மணல்-சாம்பல் to வெண்மை
👉வண்டல்மண்-கருமை ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags