கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, அரசு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நிறுத்தப்பட்டன.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது தாங்கள் இருக்கும் ஊர்களிலேயே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்லத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.