1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மனிதர்கள் இரண்டு கால்களால் (two Legs) விழாமல் நடக்க முடிவதேன்

அறிவியல்-விளக்கம்
மனிதர்கள் இரண்டு கால்களால் (two Legs) விழாமல் நடக்க முடிவதேன்

🏵பதில்🏵
👉நாம் நடக்கும் போது உடல் உறுப்புகளின் சமநிலை மற்றும் இயற்கை விசையின் ஒத்துழைப்பு ஆகியவற்றினால் கீழே விழாமல் நடக்க முடிகிறது.
🏵விளக்கம்🏵
👉பெரும்பாலான விலங்குகள் நான்கு கால் பிராணிகள் (tetrapods) ஆகும்.இவை நிற்கும் போதும் நடக்கும்  போதும் பூமியோடு தொடர்புள்ள நான்கு கால்களின் ஆதாரத்தினால் (support) சமநிலையைப் பெற்று எளிதாக நிற்கின்றன /நடக்கின்றன.
👉ஆனால் மனிதர்கள் இரண்டு கால்களினால் நடப்பவர்கள் (biped).நடக்கும் போதும் நிற்கும் போதும் உடலை சமநிலைப்படுத்த  இரண்டு ஆதாரம்  மட்டுமே கால்களின் பாதத்தில் உள்ளது.
👉உடலை சமநிலைப்படுத்தி நிற்பது மற்றும் நடத்தல் மேற்கொள்வது உடலின் உறுப்புகள் மற்றும் இயற்கை விசையினால் சாத்தியமடைகிறது.
👉உடலின் சமநிலை (Body balance/equilibrium) என்பது உடலின் நிறை மையத்தை (centre of mass of body ) கால் பாதத்தின் ஆதாரத்தில் பராமரிக்கும் திறனாகும்.
🏵இயற்கையின் விசைகள் (Natural forces)🏵
1.காற்றழுத்தம் (Air pressure) : நமது தொடையெலும்பானது (thighbone) இடுப்பு மூட்டின் (hip joint) பந்து கிண்ணத்துடன் கச்சிதமாக பொருந்துவதால் ஒரு விதமான வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் உருவாகும் காற்றழுத்தம் காலை உடலிலிலிருந்து மிகக் குறைந்த எடையுள்ளதைப் போல் தொங்கச்விடச் செய்கிறது.
2.பூமியின் ஈர்ப்பு விசை :நடக்கும் போது நமது தசையினால் ஒருகாலை பூமியில் வைத்து மறுகாலை உயர்த்தும் போது பூமி அதனை கீழ் நோக்கி இழுப்பதனால் ஊசல் (pendulum) போல் கால் ஊஞ்சலாடுவதால் (swinging) நடக்க முடிகிறது.
🏵உடல் உறுப்புகள்🏵
👉சிறுமூளையானது (cerebellum) உடலின் சமநிலை,இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
👉சிறுமுளையானது நரம்பு மற்றும் தசைகளுக்கு கால் செல்ல வேண்டிய பாதையில் செலுத்த கட்டளையிடுகிறது.
👉உடலின் சமநிலையை உடலில் உள்ள உறுப்பான(organ) உட்புற காது (inner ear)  நேரடியாக பராமரிக்கின்றது.
🔥மேலும் அறிக🔥
👉நாம் நிற்பதற்கு கூட 300 தசைகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் தான் நீண்ட நேரம் நிற்கும் போது நாம் சோர்வடைகிறோம்.
👉ஒரு மனிதனின் சராசரி நடையின் வேகம் மணிக்கு 5 கிமீ என்ன அளவில் இருக்கிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags