கோபத்தால் உண்டான விளைவு: யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ஜோகோவிச் தகுதியிழப்பு
யு.எஸ். ஓபன் போட்டியின் 4-வது சுற்றில் பப்லோ கர்ரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார் ஜோகோவிச். முதல் செட்டில் பப்லோ 6-5 என முன்னிலை பெற்றிருந்தபோது கோபத்துடன் பந்தைப் பின்னால் அடித்தார் ஜோகோவிச். அது லைன்ஸ்மேன் மீது பட்டதால் உடனடியாக ஜோகோவிச் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறையை மீறிய குற்றத்துக்காக உடனடியாகத் தகுதியிழப்பு செய்யப்பட்டார் ஜோகோவிச். இதனால் போட்டியிலிருந்து அவர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. வேண்டுமென்றே பந்தை லைன்ஸ்மேன் மீது அடித்ததால் இந்த நடவடிக்கை எடுத்ததாக யு.எஸ். ஓபன் போட்டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நடந்த சம்பவத்துக்காக வருத்தப்படுகிறேன். லைன்ஸ்மேன் மீது பந்து பட்ட பிறகு அவருக்குப் பாதிப்பு இல்லை எனப் பார்த்துக்கொண்டேன். அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே செய்யவில்லை. இதிலிருந்து நான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல வீரராகவும் மனிதனாகவும் நான் மாற வேண்டும். என் நடத்தைக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.