தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஒரேகட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் மற்றும் பிரசாரப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் நாளன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135 பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; அனைவருக்கும் வாக்களிக்க ஏதுவாக தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.