தேவையான பொருட்கள்.:
வாழைத்தண்டு – ஒன்று,
அரிசி மாவு – 2 டம்ளர்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
எள் – ஒரு டீஸ்பூன்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை.:
வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறுசிறு துண்டாக வெட்டிக்கொண்டு மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு அனைத்தையும் ஒன்றாகப் பாத்திரத்தில் போடவும்.
அதில் வெண்ணெய், எள், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.
இதனுடன் வாழைத்தண்டுச் சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிறகு இதில் ஒரு டீஸ்பூன் சூடு செய்த எண்ணெயைச் சேர்த்து பூரி மாவுப் பதத்திற்கு பிசைய வேண்டும்.
கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி மாவை முறுக்குகளாகச் சுட்டெடுக்கவும்.
அமிலத்தன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு வாழைத்தண்டு நல்ல தீர்வு தரும். நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு வாழைத்தண்டுச்சாறு சிறந்த மருந்து.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.