CLICK HERE DOWNLOAD FORM
எனவே , அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். வட்டார வளமையத்தின் மூலமாக பெறப்பட்ட படிவத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அடையாள அட்டை இல்லாத ஆசிரியர்களிடம் வழங்கி , அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து , தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய பிரதியை தங்கள் பள்ளி சார்ந்த வட்டார வளமையத்தில் வழங்குதல் வேண்டும்.
பள்ளிவாரியாக பெறப்பட்ட படிவங்களை ஒன்றியவாரியாக தொகுத்து , தனிநபர் வாயிலாக இவ்வலுவலகத்தில் நாளை ( 03.03.2021 ) மதியம் 4.00 மணிக்குள் வழங்குமாறு அனைத்து வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் , ஆசிரியர்களுக்கு படிவம் வழங்கும்போது , புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , பணிமாறுதலில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் , பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழுதடைந்த அட்டையை புதுப்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி , இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.