1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Antibiotics என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன?

Antibiotics என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? ஏன் வைரஸ்களை கொல்வதில்லை??

 ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் வேளையில் நமக்கு ஏற்படும் கேள்விகளில் ஒன்று ஏன் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொரோனா வைரஸ்களை கொல்லவில்லை என்பது தான். இதற்கான பதில் உள்ளே உள்ளது. ஆனால் அது பற்றி தெரிந்துகொள்ள நாம் ஆன்டிபயாடிக் என்பது என்ன என்பதில் இருந்து தொடங்கவேண்டும்.

 ஆன்டிபயாடிக் என்றால் என்ன?

Antibiotics (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) என்பவை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடப் பயன்படும் மருந்துகள். அவை ஆன்டிபாக்டீரியல் (Antibacterials) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கொல்வதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் பாக்டீரியாவால் பரவும் தொற்றுநோய்களை தடுத்து குணமாக்குகின்றன.

Did you know?

முதல் நவீனகால ஆன்டிபயாடிக் 1936 இல் பயன்படுத்தப்பட்டது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கும் முன், 30% இறப்புகள் பாக்டீரியா தொற்றுகளால் நிகழ்ந்தன.

இன்று, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. சில தீவிர நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு Antibiotics உயிர் காக்கும் மருந்துகளாக உள்ளன. குறைவான நோய்த்தொற்றுகள் தீவிரமடைவதையும் அவை தடுக்கக்கூடியவை.


நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல வகை உண்டு. சில குறிப்பிட்ட வகை பாக்டீரியா தொற்றுகளுக்கு சில வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல வடிவங்களில் வருகின்றன, அவற்றுள்:

மாத்திரைகள்

காப்ஸ்யூல்கள்

திரவங்கள்

கிரீம்கள்

களிம்புகள்

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன. Antibiotics பின்வரும் வேலையை செய்து நோய்த்தொற்றை முற்றிலும் நிறுத்துகின்றன.

பாக்டீரியாவின் வெளிப்புற சுவரைத் தாக்கும்

பாக்டீரியாவைச் சுற்றியுள்ள உறையை தாக்கும்

பாக்டீரியா பல்கி பெருகவிடாமல் தடுக்கும்

பாக்டீரியாவில் புரத உற்பத்தியைத் தடுக்கும்

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நீங்கள் அவற்றை எடுக்கத் தொடங்கிய உடனேயே வேலை செய்யத் தொடங்குகின்றன. இருப்பினும், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பிறகு தான் உடல்நிலை சீராகும்.
ஆன்டிபயாட்டிக் சிகிச்சையின் பின்னர் குணமடையும் வேகம் சிகிச்சையளிக்கும் நோய்த்தொற்றின் வகையையும் பொறுத்தது.

பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 7 முதல் 14 நாட்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சிலநேரங்களில், குறுகிய சிகிச்சைகள் நன்றாக வேலை செய்கின்றன. நம் ஊரில் குறைந்தது 3 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும், மருத்துவர்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை பாதியிலேயே நிறுத்த வேண்டாம் என்பார்கள்.

Did you know?

இரண்டாம் உலகப் போரின் போது காயமடைந்த போர் வீரர்களைத் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்தது பென்சிலின் என்னும் Antibiotic மருந்தாகும்.

எந்த நோய்களுக்கு ஆன்டிபயாடிக் பயன்படுகிறது?

பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் தொற்று பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கும். ஏனெனில் அறிகுறிகள் பெரும்பாலும் மிகவும் ஒத்ததாக இருக்கும்.
மருத்துவர்கள் அறிகுறிகளை மதிப்பீடு செய்வர் மற்றும் நோய்த்தொற்றின் காரணத்தைத் தீர்மானிக்க உடல் பரிசோதனை செய்வர். சில நேரங்களில், நோய்த்தொற்றின் காரணத்தை உறுதிப்படுத்த அவர்கள் இரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனையை கோரலாம்.
சில பொதுவான பாக்டீரியா தொற்றுகள் இவை

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்

சைனஸ் மற்றும் காது நோய்த்தொற்றுகள்

தொண்டை வலி மற்றும் காய்ச்சல்

வைரஸ்களால் ஏற்படும் சளி அல்லது காய்ச்சல் போன்றவைகளுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இல்லை.

ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு (Antibiotic Resistance) என்றால் என்ன?

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சக்திவாய்ந்த மருந்துகள். அவை சில வகையான நோய்களுக்கு நன்றாக வேலை செய்கின்றன. இருப்பினும், சில Antibiotic மருந்துகள் ஒரு காலத்தில் இருந்ததை விட இப்போது குறைவாகவே செயலாற்றுகின்றன. இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் அந்த Antibiotic மருந்தின் வீரியத்தை தாண்டி வளர்வதேயாகும்.
கொசுவர்த்திகளை தாண்டி கொசுக்கள் வளர்வது போல், ஆன்டிபயாட்டிக்கையும் தாண்டி பாக்டீரியாக்கள் வாழவும், வளரவும் பழகிவிட்டன. இது தான் Antibiotic Resistance. இதனால் மருத்துவர்கள் மிகவும் அவசியம் எனும் போது மட்டும் பரிந்துரைக்க வேண்டும்.
உலகம் முழுவதிலும் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சில Antibiotic மருந்துகள் தரப்படுகின்றன. இந்த வளர்ப்பு கோழிகளை அதிகம் உண்ணும் போது, அதன் மூலம் Antibiotic நம் உடலுக்கும் வந்துவிடுகிறது. இது நம்மையும் பாக்டீரியாவிடம் இருந்து காக்கும் என்பது போல தோன்றினாலும், இது நல்லதல்ல. இப்படி நம் உடலில் சேரும் Antibiotic மருந்துகளையும் தாண்டி பாக்டீரியாக்கள் வளர பழகிவிடுகின்றன. இதனால், பாக்டீரியாக்களை கொல்ல அதிகப்படியான Antibiotic தேவைப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் பலனளிப்பதில்லை.

மருத்துவர்கள் Antibiotic மருந்துகளை பரிந்துரைக்காமல் இருப்பது தான் மிகச்சிறந்தது. அவர்கள், பரிந்துரைக்கும் 30% ஆண்டிபயாடிக் தேவையற்றது என்று கருதப்படுகிறது.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 30% ஆண்டிபயாடிக் தேவையற்றது என்று கருதப்படுகிறது.

சில Antibiotic மருந்துகளால் பாக்டீரியாவை இனி கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதபோது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு (Antibiotic Resistance) ஏற்படுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பக்க விளைவுகள் என்ன??

பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன.

வயிற்றுப்போக்கு

குமட்டல்

வாந்தி

தசை பிடிப்புகள்

சில நேரங்களில், நீங்கள் ஆன்டிபயாட்டிக் மருந்தை உணவுடன் எடுத்துக் கொண்டால் இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம். இருப்பினும், சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் உட்பட எந்த மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களே எடுத்துக்கொள்ளக் கூடாது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) ஏன் வைரஸ் தொற்று நோய்களைக் கொல்வதில்லை?

நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் வைரஸ்களைக் கொல்ல முடியாது. ஏனெனில் வைரஸ்கள் வெவ்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் பாக்டீரியாவை விட வேறு வழியில் பல்கி பெருகுகின்றன.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறிப்பிட்ட பாக்டீரியாக்களைக் கொல்ல அல்லது தடுக்க பாக்டீரியாக்களில் அதன் வளர்ச்சிக்கு உதவும் இயந்திரங்களை (Growth Machinery) குறிவைத்து செயல்படுகின்றன. வைரஸ்களை கொல்ல முடியாது.

Antibiotics பாக்டீரியாக்களை கொல்ல மட்டுமே பயன்படும். அதனால் இவைகள் Antibacterial எனப்படுகின்றன. வைரஸ்களை கொல்லும் மருந்து Antiviral எனப்படுகிறது.

இப்போது கொரோனாவைரஸை கொள்ளும் திறன்வாய்ந்த Antiviral மருந்தை கண்டுபிடிக்கவும், நோய் தடுப்பு மருந்து (Vaccine) கண்டுபிடிக்கவும் அறிவியல் உலகம் முயன்று கொண்டிருக்கிறது.
குறிப்பு: சரியான முறையில் பயன்படுத்தும்போது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே Antibiotics மருந்துகளை பயன்படுத்தலாம்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags