1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மனிதர்கள் (Human) வயதானவர்களாகி (getting old) விடுவதேன்

🔥அறிவியல்-விளக்கம்🔥
💐மனிதர்கள் (Human) வயதானவர்களாகி (getting old) விடுவதேன்💐
🏵பதில்🏵
👉மனித செல்கள் இறப்பதற்கு முன் சுமார் 50 முறை மட்டுமே பிரியும் திறன் கொண்டவையாக உள்ளதால் வயதாகிவிடுதல் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.


👉ஆனால் அமீபாக்கள் மற்றும் பாக்டீரியம் போன்றவை சில காலம் வாழ்கின்றன.பிறகு இரண்டு மகள் ( two daughter cells) உயிரணுக்களாக சிதைந்து போகாமல் பிரிந்து விடும்.இந்த உயிரணுக்கள் ஒருபோதும் பெருகும் திறனை இழப்பதில்லை.
👉வயதாகிவிடுதலுக்கு காரணமான முன்மொழியப்பட்ட இரண்டு காரணங்கள்
1.திட்டமிடப்பட்ட செல்லுலார் காரணிகள் (Programmed cellular factors)
2.சேதம் தொடர்பான காரணிகள் (damage related factors)
🏵திட்டமிடப்பட்ட செல்லுலார் காரணிகள் (Programmed cellular factors)🏵
👉காலப்போக்கில் செல்கள் சரியாகப் பிரியத் தவறியதன் விளைவாக திட்டமிடப்பட்ட செல்லுலார் காரணிகள் நிகழ்கின்றன.
(i)செல்லிரட்டிப்பு சுருங்கல் (Telomeres shortening)காரணமாக நமது செல்கள் பிரிக்கும் திறனை இழக்கிறது.
(ii)குழப்பமான தருணங்களில், தன்னுடல் நோய்யெதிர்ப்பு சக்தி(autoimmunity phenomenon) என்ற நிகழ்வில் உடலின் நோயெதிர்ப்பு செல்களே நம் உடலை தாக்குகிறது.குறிப்பாக உடலின் நுரையீரலை தாக்குகின்றன.
(iii)டி.என்.ஏ மெத்திலேஷன் (DNA Methylation) மிகவும் தேவையான ஒன்றாகும்.காலப்போக்கில் டி.என்.ஏவின் மெத்திலேஷன் குறைவதால் இது வயது முதிர்வை ஏற்படுத்துகிறது.
🏵சேதம் தொடர்பான காரணிகள் (damage related factors)🏵
(i)நாம் தொடர்ந்து நமது சூழலில் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறோம்.காலப்போக்கில் நம் உடல்கள் சேதத்தை சேர்க்கின்றன.
👉வயதானவுடன் பொதுவாக தொடர்புடைய ஒரு அறிகுறி தோல் சுருக்கமாகும்(wrinkling).
👉20 வயதிற்கு பிறகு,ஒவ்வொரு ஆண்டும் சருமத்தில் 1% கொலாஜனை (collagen) குறையச் செய்கிறது.இதன் விளைவாக காலப்போக்கில் தோல் மேலும் சுருக்கமடைகிறது.
👉சூரியனிலிருந்து வரும் UV கதிர்கள் காலப்போக்கில் 80% தோல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
(ii)ஃப்ரீ ரேடிக்கல்:செல்லுலார் வளர்சிதை மாற்றத்தின் நச்சு விளை பொருளான ஃப்ரீ ரேடிக்கலானது நமது உயிரணுக்களை சேதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
🔥மேலும் அறிக🔥
👉பாலைவன ஆமையை பொருத்தவரை அதன் இளம்வயதில் இறப்புகான வாய்ப்பு அதிகமாக உள்ளது ஆனால் வயதாகும் போது இறப்பு விகிதம் குறைகிறது.
👉ஹைட்ரா (Hydra) எனும்  முதுகெலும்பில்லாத நன்னீர் விலங்கிற்கு இறப்பு மற்றும் கருவுறுதல் பல நூற்றாண்டுகளாக மாறாமல் இருப்பதுடன் அதன் உடல் வயதான அறிகுறிகளை காட்டுவதில்லை.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags