🔥அறிவியல்-விளக்கம்🔥
💐வானவில்லானது (Rainbow) அரை வட்டமாக (semi-circular) தோற்றமளிப்பதேன்💐
🏵பதில்🏵
👉உண்மையில் வானவில்லின் வடிவம் வட்டமாகும் (circular).
👉பூமிபரப்பிலிருந்து காணும் போது பாதி வானவில் பூமியால் மறைக்கப்படுகிறது. எனவே பூமியால் மறைக்கப்படாத மேல் உள்ள பகுதியை மட்டுமே அரை வட்டமாக (semi-circular) காண்கிறோம்.
👉ஆகாய விமானத்திலிருந்து காணும் போது வட்ட வடிவத்தில் முழு வானவில்லையும் காணலாம்.
🏵விளக்கம்🏵
👉மழை பெய்யும் போது அல்லது பெய்த பிறகு காற்றில் மிதக்கும் நீர்த்துளிகள் மீது படும் சூரிய ஒளியானது ஒளிவிலகல் (refraction),முழு அக எதிரொளிப்பு (total internal reflection) மற்றும் நிறப்பிரிகை அடைவதால் வானவில் தோன்றுகிறது.
(முழு அக எதிரொளிப்பு:எதிரொளிக்கும் பரப்பானது அனைத்து படுகதிரையும் முழுவதுமாக எதிரொளிக்கும் நிகழ்வாகும்)
👉பார்வையாளருக்கு பின்புறம் சூரியனும் முன்புறம் நீர்த்துளிகளும் (water droplets)இருப்பின்,ஒன்றினுள் மற்றொன்றாக இரு வானவில்லை காணலாம்.அவை முதன்மை வானவில் (primary rainbow) மற்றும் துணை வானவில் (secondary rainbow) ஆகும்.
👉வானவில்லை ஒரு இருபரிமாணமாக (2-Dimensional) நினைப்பது வழக்கம்.இது திரிபுக் காட்சியாகும்.
ஆனால் வானவில் வானத்தில் முப்பரிமாண (3-Dimensional) வெளியில் பரவிக் கிடக்கின்றன.
👉நீர்துளிகள் சூரியக் கதிர்களை 40° மற்றும் 42° கோணத்தில் (முதன்மை வானவில்) சூரியக் கதிரின் அலைநீளத்தைப் பொறுத்து மேற்கண்ட கோணங்களை வட்டத்தின் தளங்களாக (circular plane) உள்ளடக்கிய முப்பரிமாண கூம்பினால் (cone) எதிரொளிப்பிற்கும்,ஒளிவிலகலுக்கும் உட்படுவதால் ஏராளமான வானவில்களை வானத்தில் உருவாக்குகின்றன.
👉மேற்கண்ட வானவில்கள் முப்பரிமாண கூம்பில் அமைந்த வட்டத்தின் தளங்களாக இருப்பதால் இரண்டு நபர்கள் சரியாக ஒரே வானவில்லை காண இயலாது.
👉சூரியக்கதிர்கள் முப்பரிமாண வெளியில் நீர்துளிகளால் ஒளிவிலகலுக்கும்,மீண்டும் எதிரொளிப்பிற்கும் உட்படுவதை பொறுத்து ஒவ்வொருவரும் வானத்தில் வேறுபட்ட வானவில்லையே காண்கின்றனர்.
👉வானவில் ஏழு வண்ணங்களின் தொகுப்பாகும்.அவை சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,நீலம்,கருநீலம் மற்றும் ஊதா
🔥மேலும் அறிக🔥
👉முதன்மை வானவில்லானது துணை வானவில்லை விட பொலிவாகவும்,அகன்றும் இருக்கிறது.
வெளிப்பக்கம் சிவப்பு நிறத்தையும்,உட்பக்கம் ஊதா நிறத்தையும் உடைய உட்புற வானவில்லே முதன்மை வானவில்லாகும்.
👉வானவில்லின் வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிறந்த வழி மனிதனின் பெயரைப்போல் தோற்றமளிக்கும் சுருக்கமாகும் (Acronym).
VIBGYOR (Violet, Indigo,Blue,Green,Yellow,Orange,Red)

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.