1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல்  நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Service Commission Officers(Tech) Men and Women (April 2021)

காலியிடங்கள்: 191(இதில் 2 இடங்கள் போரில் வீரமணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் PG Diploma in Defence Management and Stategic Studies எனும் படிப்புக்கு அனுமதிக்கப்படுவர். படிப்பு முடிந்தவுடன்  இந்திய ராணுவத்தில் "துணை அதிகாரி"யாக பணி அமர்த்தப்படுவர். 

பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2020 

மேலும் கல்வி, துறைவாரியான காலியிடங்கள் பயிற்சி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்கொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags