கமர் கட்டு
🌷தேவையானப் பொருட்கள்
தேங்காய் - 1 கப் (துறுவியது)
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 2 தேக்கரண்டி
🌷செய்முறை
1. முதலில், ஒரு கடாயில் துறுவியத் தேங்காயை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு, அதே கடாயில் வெல்லத்தைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
3. அது கரைந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டிக் கொள்ளவும்.
4. பின், வடிக்கட்டிய வெல்லத்தை ஒரு கடாயில் விட்டுக் கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
5. பிறகு, அதில் வறுத்தத் தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
6. பின்பு, எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது, ஒரு நெய் தடவியப் பாத்திரத்தில் கொட்டவும்.
7. பிறகு, கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.
இப்பொழுது, பள்ளி பருவத்தை நினைவூட்டும் கமர் கட்டு தயார்..
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.