உலக நாடுகளில் ஆசிரியர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதல் பத்து நாடுகளில் 6 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்த ஆய்வு 35 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த வர்க்கி பவுண்டேசன், ஆசிரியர்களைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை கடந்த வாரம் அறிவித்தது. நாட்டில் ஆசிரியர்களின் நிலை குறித்த மக்களின் மனந்திறந்த கருத்துக்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
"அடுத்தாண்டும் சிஎஸ்கேவை தோனி வழி நடத்துவார்" - காசி விஸ்வநாதன் சீனா, சிங்கப்பூர், கனடா, மலேசியா, கனடா மற்றும் கானா போன்ற நாடுகளில் நேரடியாக அல்லாமல் மறைமுக முறையில் ஆசிரியர்களின் நிலை குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது.
நம்பகமான, நம்பகத்தன்மையற்ற, பாதிப்பை ஏற்படுத்துபவர், பாதிப்பை ஏற்படுத்தாதவர், புத்திசாலித்தனம் மிக்கவர், புத்திசாலித்தனம் இல்லாதவர் உள்பட பலவகை கேள்விகளின் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
"இந்த ஆய்வின் மூலம் ஆசிரியர்களை மதிப்பது முக்கியமான கடமை மட்டுமல்ல, ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்கிறார் ஆய்வை மேற்கொண்ட வர்க்கி பவுண்டேசன் நிறுவனர் சன்னி வர்க்கி.
உலகில் 35 நாடுகளில் தலா ஆயிரம் பேரிடம் ஆசிரியர்கள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆசிரியர்களின் நிலை பற்றிய கருத்தில் நாடுகளுக்கு இடையே வேறுபாடு இருந்தது. வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களின் நிலை பொதுவாக உயர்ந்து காணப்பட்டது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.