நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி: ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் கூறிப்பில்:
பல்வேறு முறை நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், கடந்த 28ம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு
பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
➤ பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றிசெயல்பட அனுமதி. குறிப்பாக 9, 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகள் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
➤ பள்ளி மற்றும் கல்லூரிகள், பணியாளர்கள் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளும் செயல்பட அனுமதி
➤ புறநகர் மின்சார ரயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி!
➤ சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணிசெய்ய அனுமதி. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
➤ ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
➤ மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை 100 நபர்கள் பங்கேற்கும் வகையில், நடத்த அனுமதிக்கப்படுகிறது.
➤ பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் செயல்பட நவம்பர் 10ம் தேதி முதல் அனுமதி!
➤ திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது
➤ தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2 முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபார கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16 முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
➤ தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
மறு உத்தரவு வரும் தடைகள் தொடரும்:
➤ நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்
➤ மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
➤ வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி மாநிலம் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.