வாட்ஸ்அப் Backup பாதுகாப்பானதா? பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்!
இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப்.
தனிப்பட்ட தரவுகள் உள்ளிட்ட பல தகவல்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்வதற்கு இந்த செயலியை நாம் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் இதில் உள்ள Chats-ஐ சேமித்து வைப்பதற்காக Backup எடுத்து வைத்துக் கொள்வோம். ஆனால் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியுமா? அதற்கான முழு விவரங்களையும் இங்கே காண்போம். Personal chats இருந்தால் அதனை Backup எடுக்காமல் இருப்பதே நல்லது.
கூகுள் டிரைவ்:
தரவுகளை பாதுகாப்பதற்காக end-to-end encryption முறையை வாட்ஸ் அப் தளத்தில் மட்டுமே அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதனால் வாட்ஸ் அப்பை விட்டு உங்கள் Chats-ஐ கூகுள் டிரைவ் அல்லது icloud-க்கு மாற்றினால் உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறிதான். ஏனென்றால் ஹேக்கர்கள் அதனை எளிதாக திருட முடியும்.
WhatsApp pin:
வாட்ஸ் அப் two-factor authentication என்ற முறையை வழங்கியுள்ளது. மூன்றாம் தரப்பினரிடம் இருந்து உங்கள் மெசேஜை பாதுகாப்பாதற்கு இந்த ஆறு இலக்க எண் உதவுகிறது. ஹேக்கர்கள் உங்கள் சிம் கார்டையோ, மொபைலையோ ஹேக் செய்தால் கூட, வாட்ஸ் அப்பில் அவர்கள் நுழைவதற்கு உங்கள் அனுமதி கட்டாயம் அவசியம். இதற்கான OTP உங்கள் எண்ணிற்கு வரும்.
இ-மெயில்:
two-factor authentication அனுமதி அளிப்பதற்கு நீங்கள் இ-மெயில் ஐடி கொடுத்துக் கொள்ளலாம். WhatsApp pin மறந்துவிட்டாலும், மெயில் வைத்து இதனை நீங்கள் இயக்கலாம். இந்த தகவல்களை தவறாக கொடுப்பவர்களால், உங்கள் கணக்கை இயக்க முடியாமல் போகும்.
Pen drive:
வாட்ஸ் அப் போட்டோக்கள், வீடியோக்களை உங்கள் மொபைலுக்கோ, மெமரி காட்டுக்கோ மாற்றும் வசதியும் அந்த செயலியில் உள்ளது. இல்லையென்றால் முக்கிய தரவுகளை நீங்கள் பென் டிரைவுக்கு கூட மாற்றிக் கொள்ளலாம்.
Chat backup:
நீங்கள் ஏற்கெனவே அனைத்து தரவுகளையும் கூகுள் டிரைவுக்கு மாற்றி வைத்திருந்தால், அதனை எளிதாக டெலிட் செய்ய முடியும். உங்கள் போன் மூலமாகவோ அல்லது கணினியை பயன்படுத்தியோ நீங்கள் டெலிட் செய்ய முடியும்.
iPhone:
நீங்கள் இத்தனை நாட்களாக ஐ-போன் பயன்படுத்தி விட்டு, தற்போது ஆண்ட்ராய்டு போனுக்கு மாற நினைத்தால், உங்கள் தரவுகளை backup எடுப்பதை மறந்துவிடுங்கள். ஏனென்றால் அதற்காக வசதி வாட்ஸ் அப்பில் கொடுக்கப்படவில்லை. வேறு சில செயலிகள் பயன்படுத்தி இதனை செய்யலாம். ஆனால் அது 100 சதவீதம் பாதுகாப்பானதா என்பது சந்தேகம்தான்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.