இந்தியாவில் பப்ஜி வீடியோ கேம் ஏற்கனவே பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீன எல்லையான லடாக்கில் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு கருதி சீன செயலிகளான டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இரண்டாம் கட்டமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதில் இந்தியாவில் அதிக பயணர்களை கொண்டுள்ள பப்ஜி பெரும் பாதிப்பை சந்தித்தது. செயலியின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் செயலி தடையை ரத்து செய்யவும் மத்திய அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இருப்பினும் பப்ஜி விளையாட்டு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் வலைதளங்கள் மூலமாகவும், வேறு வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாக தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டு செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது. இதன் மூலம் இன்று முதல் பப்ஜி செயலியை இந்தியாவில் பதிவிறக்கம் செய்தவர்களும் விளையாட முடியாது. மேலும் இந்தியாவில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகவும் டென்சண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் பயனாளர்களின் தரவை பாதுகாப்பது எபோதுமே முதன்மையானது. இந்திய அரசின் தரவு பாதுகாப்பு சாட்டங்களுக்கு நாங்கள் இணங்குகிறோம் எங்கள் தனியுரிமைக் கொள்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி அனைத்து பயனர்களின் விளையாட்டுத் தகவல்களும் வெளிப்படையான முறையில் செயலாக்கப்படும். இந்த முடிவுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இந்தியாவில் PUBG MOBILE க்கான உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளது.
உலகில் தற்போது மிகப்பிரபலமான மொபைல் கேம்களில் ஒன்றாக பப்ஜியும் இருந்து வருகிறது. இந்த கேம் இதுவரை உலகம் முழுவதும் 60 கோடி முறைகளுக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை சுமார் 5 கோடிக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் கொரோனா நெருக்கடி காலத்தில் 17 கோடியே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.