1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து

 

தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணத்தில் 30% ரத்து



பெற்றோர்களின் பொருளாதார சிக்கலை சற்று குறைக்கும் வகையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தில் 30% ரத்து செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து, ஆந்திர மாநில பள்ளிக் கல்வி ஒழுங்காற்று ஆணையம் அளித்த பரிந்துரையையும் ஆராய்ந்து, 2020 - 21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதத்தை ரத்து செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாக முதன்மைச் செயலாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின் மூலம், அரசு உதவி பெறாத அனைத்துத் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும், இந்த கல்வியாண்டுக்கான 70 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், பள்ளிகள் இயங்குவதால் ஏற்படும் செலவுகளும் பராமரிப்புச் செலவும் பள்ளி நிர்வாகங்களுக்கு இல்லை என்பதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags