தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விவரங்களை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தேர்வும் நடத்தப்பட்டது.தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்வை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தது. இதையடுத்து அந்த தேர்வை கடந்த 2018-ம் ஆண்டு ரத்து செய்து அறிவித்தது.
இந்நிலையில் அந்த பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மீண்டும் அறிவிக்கப்பட்ட தேர்வில் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்டு கண்டுபிடிக்கப்பட்டவர்களும் அதில் விண்ணப்பித்திருந்ததாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்பட்ட 196 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் யார்? யார்? என்பது குறித்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் பெயர், விண்ணப்ப முகவரி, நிரந்தர முகவரி, கல்வித் தகுதி, தந்தை பெயர், பிறந்ததேதி போன்ற முழுத் தகவல்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தனது www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.