சென்னை வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ் விலக்கு
அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு
வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சில சேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம்
அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்
1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்
2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்
3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்
4. சுகன்யா சம்ரிதி திட்டம்
5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு
உண்டு)
6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை
7. முதியோர் சேமிப்பு திட்டம்
8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு
9. முதலீட்டு சேமிப்புக்கள்
10. ஓய்வூதியம்
11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்கு மட்டும்)
12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்
இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும். எனவே இவை குறித்து உங்கள் நிதி ஆலோசகரின் அறிவுரையின் படி சேமிப்பதன் மூலம் வருமான வரி விலக்கு பெற முடியும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.